மருத்துவமனையில் பவர் ஸ்டார் – வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பவர் ஸ்டாரின் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கண்ணா லட்டு திண்ண ஆசையா என்னும் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்பு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். இந்நிலையில், இவர் அண்மையில் வனிதா விஜயகுமார் உடன் இணைந்து பிக்கப் டிராப் எனும் படத்தில் நடித்து வந்தார்.
இந்த படத்துக்கான படப்பிடிப்பின்போது பவர் ஸ்டார் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள பவர் ஸ்டாரின் தற்போதைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான ஒரு புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்தஅவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் பவர் ஸ்டாரின் உடல்நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருவதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.