பிணங்களுக்கு மத்தியில் உணவு சாப்பிடும் அமலா பால் - ‘கடவேர்’ போஸ்டர் வைரல்

cinema-poster-amalapal
By Nandhini Oct 27, 2021 03:55 AM GMT
Report

அமலா பால் நடிப்பில் உருவாகிவரும் ‘கடவேர்’ திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமலா பால் நடிப்பில் உருவாகிவரும் கிரைம் த்ரில்லர் படம் ’கடவேர்’. மலையாள இயக்குநர்களான அனூப் பனிக்கர் மற்றும் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் இத்திரைப்படத்தை இயக்குகின்றனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாகிவரும் தடவியல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் இதுதான் என்று சொல்லப்படுகிறது. இதில் அமலா பால் டாக்டர் பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடவேர் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று இன்று வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த போஸ்டரில் சுற்றிலும் பிணங்கள் கிடக்கும் அறையில் அமர்ந்து கொண்டு அமலாபால் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே, அமலா பால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆடை படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

பிணங்களுக்கு மத்தியில் உணவு சாப்பிடும் அமலா பால் - ‘கடவேர்’ போஸ்டர் வைரல் | Cinema Poster Amalapal