ஆர்யன் கானின் கைது மிகவும் போலியோனது... அடுத்த குறி ஷாருக்கானுக்குத்தான் - அமைச்சர் பகீர் தகவல்

cinema-politics-drung-sharukhan
By Nandhini Oct 06, 2021 12:28 PM GMT
Report

ஆர்யன் கானின் கைது போலியானது என்றும், அடுத்த இலக்கு ஷாருக்கான் என்றும் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் நவாப் மாலிக் பேசுகையில், “ஆர்யன் கானின் கைது போலியானது. கடந்த ஒரு மாதமாக இந்த தகவல் புலனாய்வு நிருபர்களிடம் பரப்பப்பட்டது. அவர்களின் அடுத்த இலக்கு நடிகர் ஷாருக்கான்தான்” என்றார். மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் அக்டோபர் 3ம் தேதி, தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.