திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது மறக்க வேண்டாம் : கொந்தளித்த வைரமுத்து
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு
இதையடுத்து கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்பட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.
தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும் நோக்கில் இந்த பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரசார கூட்டம் தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து அனைவரும் எழுந்து நின்றனர்.
ஆதிமொழிக்கு அவமானம்
திடீரென குறுக்கிட்ட பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநில கீதத்தை பாட சொன்னார்.
இந்த சம்பவத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டணத்தை தெரிவிக்கவே கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்
கர்நாடகா மேடையில்
— வைரமுத்து (@Vairamuthu) April 28, 2023
தமிழ்த்தாய் வாழ்த்து
பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு
இடிவிழுந்த மண்குடமாய்
இதயம் நொறுங்கியது
ஒலிபரப்பாமல்
இருந்திருக்கலாம்;
பாதியில் நிறுத்தியது
ஆதிமொழிக்கு அவமானம்
கன்னடத்துக்குள்
தமிழும் இருக்கிறது;
திராவிடத்திற்குள்
கன்னடமும் இருக்கிறது
மறக்க வேண்டாம்.
கர்நாடகா மேடையில்
தமிழ்த்தாய் வாழ்த்து
பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு
இடிவிழுந்த மண்குடமாய்
இதயம் நொறுங்கியது
ஒலிபரப்பாமல்
இருந்திருக்கலாம்;
பாதியில் நிறுத்தியது
ஆதிமொழிக்கு அவமானம்
கன்னடத்துக்குள்
தமிழும் இருக்கிறது;
திராவிடத்திற்குள்
கன்னடமும் இருக்கிறது
மறக்க வேண்டாம்.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
