போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய வீட்டின் மதிப்பு எவ்வளவு கோடின்னு தெரியுமா?
Nayanthara
cinema-
Boise Garden
By Nandhini
4 years ago
சென்னையில் உள்ள போயஸ் கார்டன் ஏரியா மிகவும் பிரபலமான ஏரியாவாகும். அந்த இடத்தில் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீடு உள்ளது.அந்த வீட்டில் தான் அவர் வசித்து வந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தனுஷ் என பல சினிமா பிரபலங்கள் அந்த ஏரியாவில் தான வசித்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது நடிகை நயன்தராவும் அந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார்.
போயஸ் கார்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் 2 எதிரெதிர் பிளாட்களை வாங்கி இருக்கிறாராம். அந்த பிளாட்களின் மொத்த விலை ரூ.18 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
வீடு வாங்கியதும் அடுத்த வேலையாக நயன்தாராவும், அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.