கடற்கரையில் கூலாக நடந்து சென்ற நயன்... - விக்கி எடுத்த வீடியோ வைரல்
துபாயில் கடற்கரை ஓரத்தில் காதலி நயன்தாராவுடன் ஜாலியாக வாக்கிங் சென்றபோது எடுத்த வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, காதலனுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்து வருகிறார்.
இந்நிலையில், இருவரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக துபாய் சென்றிருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு தற்போது இருவரும் அங்கு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்கள்.
அங்கு காதலி நயன் உடன் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். அந்த வகையில், கடற்கரை ஓரத்தில் காதலியுடன் ஜாலியாக வாக்கிங் சென்றபோது எடுத்த வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -