கவனின் ‘லிப்ட்’ பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு - புகைப்படங்கள் வைரல்
நடிகர் கவின் நடிப்பில் வெளிவந்துள்ள ‘லிப்ட்’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற கவினின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்திருக்கிறார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை வினித் வரபிரசாத் இயக்கி இருக்கிறார்.
மைக்கேல் பிரிட்டோ இசையில் உருவாகியுள்ள இப்படத்தை ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை பயமுறுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. அதேபோன்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘இன்னா மயிலு’ என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதைக் கொண்டாடும் வகையில் நடிகர் கவின் மற்றும் படக்குழுவினர் இன்று கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில் இயக்குனர் வினித் வரபிரசாத் மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.