மத நம்பிக்கையை இழிவுபடுத்தினாரா மாதவன்? வெடித்தது சர்ச்சை

cinema-mathavan
By Nandhini Dec 20, 2021 11:43 AM GMT
Report

நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி என்ற படத்தினை இயக்கி நடித்து வருகிறார். தற்போது இறுதிக்கட்டத்தில் இப்படம் உள்ளது.

அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது. தற்போது மாதவன் நடித்து முடித்திருக்கும் Decoupled என்ற வெப் சீரிஸ் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளிவந்துள்ளது. கலவையான விமர்சனங்கள் கிடைத்து கொண்டிருக்கும் நிலையில் அதில் வரும் காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் மாதவன் ஒரு அறைக்குள் நுழைகிறார். அங்கே இஸ்லாமியர் ஒருவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். மாதவன் அவர் செய்வது போலவே உடற்பயிற்சி செய்கிறார்.

இறுதியில் அந்த நபர் ஷாக் ஆக மாதவன் உடனே ஹிந்து கடவுளை வேண்டுவது போல செய்து சமாளிக்கிறார். மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

வைரலாகும் வீடியோ இதோ..