இளநரையுடன் திருமணம் செய்த பிரபல நடிகரின் மகள் - லட்சக்கணக்கில் குவியும் பாராட்டு

cinema-marriage-likes
By Nandhini Dec 16, 2021 10:04 AM GMT
Report

பிரபல நடிகர் திலிப் ஜோஷியின் மகள் நியாதிக்கு நடந்த திருமணம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகளின் திருமணம் குறித்த நடிகர் திலிப் ஜோஷி தனது இன்ஸ்டா பதிவில், 'இந்த அற்புதமான பயணத்தில் எனது மகள் நியாதி மற்றும் எனது குடும்பத்தில் புதிதாக இணையும் எனது மருமகன் யஷோவர்தன் ஆகியோர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்! எங்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. திருமண தம்பதியருக்கு நல்வாழ்த்துக்கள்.' என்று பதிவிட்டுள்ளார்.

திருமணம் என்றால், பெண்கள் பிரத்யேக மேக்அப்புடன் தன்னை அலங்கரித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு பிரபல நடிகரின் மகளாக இருந்தும் கூட, இளநரையுடன் மணமகள் நியாதி திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

அவரது இந்த எளிமையை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். இது குறித்து இன்ஸ்டாவில் ஒரு நபர் கூறுகையில், 'நியாதி, நீங்கள் உங்கள் இளநரையை மறைக்காமல் இருந்ததற்கு நன்றி.உங்கள் திருமண புகைப்படங்கள் அழகாக இருக்கிறது. என்று கூறியுள்ளார்.

இன்னொரு நபர், 'மணமகள் மன உறுதியோடு தலைக்கு வர்ணம் பூசாமல் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். அவரது தைரியம் பாராட்டத்தக்கது' என்றார்.

நடிகர் திலிப் ஜோஷி தனது மகளின் நியாதியின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இவை லட்சக்கணக்கில் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.  

இளநரையுடன் திருமணம் செய்த பிரபல நடிகரின் மகள் - லட்சக்கணக்கில் குவியும் பாராட்டு | Cinema Marriage Likes

இளநரையுடன் திருமணம் செய்த பிரபல நடிகரின் மகள் - லட்சக்கணக்கில் குவியும் பாராட்டு | Cinema Marriage Likes