வெற்றி பெற்ற 'மாநாடு' - படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு

cinema-manatu -rajinikanth-wishes manatu team
By Nandhini Nov 27, 2021 05:27 AM GMT
Report

மாநாடு படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து, நடிகர் ரஜனிகாந்த் மாநாடு படக்குழுவினருக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘மாநாடு’. இப்படம் திரைக்கு வந்து மக்களிடையே அபார வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால், சிம்புவின் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

முதல் முறையாக டைம் லூப் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு வெற்றிப் பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இப்படம் வெளியான முதல் நாளே ரூ. 8 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவினருக்கு போன் செய்து படம் சிறப்பாக வந்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பெருமையுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.