மம்முட்டி நிலத்தை புறம்போக்கு நிலமாக அறிவித்த உத்தரவு ரத்து - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

cinema mammootty High Court judgment
By Nandhini Dec 22, 2021 05:48 AM GMT
Report

நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில் நடிகர் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு என்னும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மம்முட்டியின் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக மறுவகைப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மம்முட்டி தரப்பினரின் விளக்கத்தைக் கேட்டு, 12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.