‘லிகர்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது - பிரியாவிடை கொடுத்த மைக் டைசன்

cinema liquor shooting-mike tyson
By Nandhini Dec 01, 2021 06:44 AM GMT
Report

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன் ‘லிகர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘லிகர்’.

இப்படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படம் சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகும் இப்படத்தில் உலக புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தாலும், குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடான முக்கிய காட்சிகள் எடுக்க படக்குழு அமெரிக்கா சென்றிருந்தது. இதற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. முக்கிய காட்சிகள் முழுவதுமாக எடுக்கப்பட்டுவிட்டன.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் மைக் டைசனுக்கு பிரியாவிடை கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

‘லிகர்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது - பிரியாவிடை கொடுத்த மைக் டைசன் | Cinema Liquor Shooting Mike Tyson