‘யம்மாடியோவ்...’ கோலாகலமாக களைக்கட்டும் கத்ரீனா கைஃப் திருமண கொண்டாட்டம் - ஒரு நாளைக்கு வாடகை எவ்வளவு தெரியுமா?

rent cinema-katrina-kaif- marriage-hall
By Nandhini Dec 07, 2021 11:37 AM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், நடிகர் விக்கி கௌஷலின் திருமணம் ராஜஸ்தானில் இருக்கும் Six Senses Fort Barwara ரிசார்ட்டில் நடைபெற உள்ளது.

திருமண ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. அந்த ரிசார்ட்டில் உள்ள ராஜா மன்சிங் அறையில் விக்கி கவுஷலும், ராணி பத்மாவதி அறையில் கத்ரீனா கைஃப் தங்க இருக்கிறார்கள். அந்த அறைக்கு ஒரு இரவுக்கு மட்டும் ரூ.7 லட்சம் வாடகையாம். இந்த இரு அறைகளிலும் நீச்சல் குளம், தோட்டம், ஆடம்பர சோபாக்கள் என்று பலவும் இருக்கிறது.

ஜெய்ப்பூரில் விக்கி கவுஷல் மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் திருமணம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அவர்களின் திருமணத்தையொட்டி அந்த ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கத்ரீனா தன் முன்னாள் காதலரான பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

‘யம்மாடியோவ்...’ கோலாகலமாக களைக்கட்டும் கத்ரீனா கைஃப் திருமண கொண்டாட்டம் - ஒரு நாளைக்கு வாடகை எவ்வளவு தெரியுமா? | Cinema Katrina Kaif Marriage Hall Rent