படப்பிடிப்பின்போது செம மாஸாக லுக் கொடுத்த கமல் - வைரல் புகைப்படம்
கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்து வருகிறார்கள். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் ஷிவாணி நாராயணன், மைனா நந்தினி, மகேஷ்வரி ஆகிய மூவர் கதாநாயகிகளாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. அனிரூத் இசையமைக்கும் இப்படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் கமல் மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கமல் பைக்கில் செம ஸ்டைலாக உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.