கமல் ஹாசனின் நிலை இதுதான் - வெளியான மருத்துவமனை அறிக்கை

cinema kamal- hospital-report
By Nandhini Dec 01, 2021 09:53 AM GMT
Report
109 Shares

கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் கமல்ஹாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, அவர் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து கமல்ஹாசன் முழுமையாக குணமாகியுள்ளார்.

இது குறித்து, மருத்துவமனையை வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல் ஹாசன் தற்போது பூர்ணமாக குணமாகி இருக்கிறார். வரும் டிசம்பர் 3ம் தேதி வரை கமல் ஹாசன் தனிமைப்படுத்தபட்டிருப்பார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கமல் ஹாசனின் நிலை இதுதான் - வெளியான மருத்துவமனை அறிக்கை | Cinema Kamal Hospital Report