‘நான் அம்மா ஆகிட்டேன்...’ கர்ப்பத்தை உறுதி செய்தார் நடிகை காஜல் - குவியும் வாழ்த்துகள்
தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் அறிமுகமானார். இதனையடுத்து பல முன்னணி நடிகருடன் நடித்ததால் அவர் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமடைந்துள்ளார் என்பது அவரது கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் மூலமாக உறுதியாகி இருக்கிறது.
புத்தாண்டு தினமான நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படத்தை கெளதம் கிச்சலு பதிவிட்டார். அதில், ‘2022 இல் உங்களை பார்க்கிறேன்” என்று பதிவிட்டதோடு, அதன் பக்கத்தில் கர்ப்பம் அடைந்த ஒரு பெண்ணின் எமோஜியை இணைத்திருந்தார். அதன் மூலம் காஜல் கர்ப்பமடைந்துள்ளது உறுதி இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து தனது கணவர் கிச்சலுவுடன் இருக்கும் புகைப்படத்தை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதில், “பழைய நினைவுகளோடு கண்களை மூடுகிறேன். புதிய தொடக்கத்திற்காக என் கண்களை திறக்கிறேன். புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2021 ஆம் ஆண்டிற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். 2022 ஆம் ஆண்டிற்குள் ஞானம், கருணை, அன்பு ஆகியவற்றுடன் நுழைகிறோம்.” என்று பதிவிட்டார். இதனையடுத்து அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.