இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் மரணம் - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
பிரபல இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் உயிரிழந்தார் மலையாளத்தின் மூத்த இயக்குநர் K.S சேதுமாதவன் (90) காலமானார்.
மலையாளத் திரைப்பட இயக்குநரான சேது மாதவன், இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட்ட பிற மொழித் திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். மலையாளத்தில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த ‘நம்மவர்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குநர் K.S சேதுமாதவன் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
இயக்குநர் சேதுமாதவன் மறைவு குறித்து நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவு இதோ -
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். pic.twitter.com/CXPcyVuMDA
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2021