‘ஜெய் பீம்’ படத்தின் வேட்டைக்கார கூட்டம் பாடல் வெளியீடு - மக்களிடையே நல்ல வரவேற்பு
சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தின் வேட்டைக்கார கூட்டம் பாடல் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
‘ஜெய் பீம்’ படத்தில் இருளர் பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்து இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியான இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தை பார்த்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்களும் இப்படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.
இப்படத்தில், ஷான் ரோல்டன் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ‘வேட்டைக்கார கூட்டம்’ லிரிக்கலை பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாடலாசிரியர் யுகபாரதி பாடல் வரிகளில், அந்தோணி தாசன் மற்றும் நிரஞ்சனா ரமணன் ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடி இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர்.