வெள்ளைநிற தேவதையாக... சும்மா கெத்தா... பாரிசில் நடந்து வந்த ஐஸ்வர்யா ராய் - வைரல் புகைப்படங்கள் - மயங்கிய ரசிகர்கள்
வெள்ளை நிற ஆடை அணிந்து, ஐஸ்வர்யா ராய் பச்சன் பாரிஸ் ஃபேஷன் வீக்கீல் வலம் வந்தார். லோரியல் பாரிஸின் பிராண்ட் அம்பாசிடர் அவர் அந்த பிராண்டிற்கான ஆடையுடன் கலந்து கொண்டார்.
இந்த நட்சத்திர நிகழ்ச்சியில், ஹெலன் மிர்ரன், கமிலா கபெல்லோ, கேத்ரின் லாங்ஃபோர்ட், அஜா நவோமி கிங், அம்பர் ஹியர்ட் மற்றும் நிகோலாஜ் கோஸ்டர்-வால்டுவா போன்ற சர்வதேச பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஈபிள் கோபுரத்தின் பின்னணியில், பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை இரவு ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் பாரிஸ் சென்றிருந்தார். தற்போது அந்த வீடியோவும் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1994ம் ஆண்டில் ஐஸ்வர்யாராய் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 45 படங்களின் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யாராய் முதலில் ஒரு மருத்துவராக ஆசைப்பட்டார். அவர் அந்த யோசனையை கைவிட்டு, கட்டிடக்கலை படிக்க முடிவு செய்தார். பாலிவுட் திரை உலகிற்கு செல்லும் முன், ரச்சனா சன்சத் அகாடமி ஆஃப் ஆர்கிடெக்சரில் சேர்ந்தார்.
இருப்பினும், மாடலிங்கில் வந்த ஆர்வத்தில் படிப்பை கைவிட்டு விட்டார். 1993ம் ஆண்டு வெளிவந்த பெப்சி விளம்பரம் அனைவருக்கும் நினைவிருக்கும். 1993 இல் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வெல்வதற்கு முன்பு, ஐஸ்வர்யா மஹிமா சவுத்ரி மற்றும் அமீர்கானுடன் சஞ்சு பெப்சி விளம்பரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.