3 புதிய வேளாண் சட்டம் விவகாரம் - ‘லத்தி ஒன்றே தீர்வு...’ - மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கங்கனா ரனாவத்

cinema-gangana
By Nandhini Nov 19, 2021 11:09 AM GMT
Report

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு வருடத்திற்கு மேல் விவசாயிகள் தொடர் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்ப அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர்கள் பாராட்டு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், நடிகை கங்கனா ரனாவத் வழக்கம்போலவே சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் அல்லாமல் தெருக்களில் இருப்போர் சட்டங்களை இயற்ற தொடங்கிவிட்டால் அது பயங்கரவாத தேசம்தான். இந்திரா காந்தியின் 104வது பிறந்த தினத்தை முன்னிட்டும் அவர், தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது லத்தி ஒன்றே தீர்வு சர்வாதிகாரம் மட்டுமே சரியான முடிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.