ஷாருக்கான் மகனிடம் போலீசார் தொடர் விசாரணை - சிக்கிய இந்தி தயாரிப்பாளர் - பல திடுக்கிடும் தகவல் அம்பலம்
சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டி விவகாரம் பிரபல இந்தி தயாரிப்பாளர் வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
மும்பையிலிருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, போதைப் பொருள் தடுப்பு போலீசார், கடந்த 3ம் தேதி அந்த கப்பலில், சாதாரண பயணிகள் போல சென்று திடீர் சோதனை மேற்கொண்டார்கள்.
அப்போது, போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன.
இதனையடுத்து, இந்த வழக்கில் 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் உட்பட 8 பேரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்கள். இந்த மனுக்கள் மீதான விசாரணையில் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பு குறைவதற்கு முன்பாகவே, பிரபல இந்தி தயாரிப்பாளர் இமிதியாஸ் கத்ரியின் மும்பை பாந்த்ராவில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.
சோதனை முடிவில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் இன்று ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டபோது எழுந்த போதை பொருள் விவகாரத்திலும், தயாரிப்பாளர் இமிதியாஸ் கத்ரியின் பெயர் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.