சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு இதுதான் காரணமாம்? வெளியான அதிர்ச்சி தகவல்!
கடந்த சில மாதங்களாக சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்து செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதெல்லாம் உண்மை என சமந்தா – நாகசைதன்யா அதிர்ப்பூர்வமாக தங்களது விவகாரத்தை அறிவித்துள்ளனர். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல உரையாடல்கள் மற்றும், யோசனைகளுக்கு பிறகு நானும், சாய்யும் கணவன் மனைவி என்ற உறவிலிருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்திருக்கிறோம். 10 வருடங்களுக்கும் மேல் எங்களுக்குள் அழகான நட்பு இருக்கிறது. அதுவே எங்கள் உறவின் ஆதாரம். அந்த நட்பு இனியும் எங்களுக்குள் இருக்கும். எங்களுடைய இந்த முடிவுக்கு மதிப்பளித்து, இந்த கடினமான சமயத்தில் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி என இருவரும் தங்களது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த விவாகரத்துக்கு காரணம் நாகசைதன்யா வேறு நடிகையுடன் காதல் உறவில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. சாய் பல்லவியை நாக சைதன்யா காதலித்து வருவதாகவும், அதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு சமந்தா ஒதுங்கிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சாய் பல்லவி நாக சைதன்யா இருவரும் இணைந்து லவ் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.