கே.வி.ஆனந்த் மரணம்- ஏமாற்றமடைந்த நடிகர் சூர்யா!
கே.வி.ஆனந்த் பிரபல தமிழ் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், ஆனந்த்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனில்லாமல் இன்று அதிகாலை 3 மணிக்கு காலமானார்.
அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக முதலில் செய்திகள் வந்தன. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க மருத்துவமனை மறுத்துள்ளது.
மருத்துவமனையிலிருந்து நேரடியாக பெசண்ட் நகர் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நடிகர் சூர்யா, கே.வி ஆனந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு சென்றார். ஆனால், ஆனந்த் உடல் அங்கு வராததால் ஏமாற்றமடைந்தனர்.
இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனாவால் மரணம் அடைந்ததால் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க மருத்துவமனை மறுத்துள்ளதால் சினிமா வட்டாரத்திலும், அவரது குடும்பத்தாரிடமும் சோகம் ஏற்பட்டுள்ளது.
