பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்
மலையாள திரையுலகில் பிச்சு திருமலா என அறியப்படும் பி.சிவசங்கரன் என்கிற பிரபல பாடலாசிரியர் இன்று காலமானார்.
1972ம் ஆண்டு மலையாள திரை உலகத்திற்கு நுழைந்தார். 1970ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையில் மலையாள சினிமா உலகில் பாடலாசிரியாக பணியாற்றி இருக்கிறார். 3000 பாடல்கள் இவர் எழுதியுள்ளார்.
மலையாள பிரபல இசையமைப்பாளர் முதல் நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வரையில் பலரின் இசைக்கு இவர் வரிகள் எழுதி இருக்கிறார். இந்நிலையில், இவர் கடந்த புதன்கிழமை அன்று திடீரென மரடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, இவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இன்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள கவர்னர் என அரசியல் தலைவர்கள் உட்பட, பல்வேறு திரைபிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.