டிடி திவ்யதர்ஷினிக்கு என்ன ஆச்சு? நடக்க முடியாமல் வீல் Chair-ல் வந்த அதிர்ச்சி வீடியோ வைரல்
திவ்ய தர்ஷினி என்கிற டிடி, விஜே மட்டும் கிடையாது, பல ரசிகர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்து வருபவர். ஆர்.ஜே வாக இருந்து, பின்னர் விஜேவாகவும், மாடலாகவும் திகழ்ந்த டிடி, சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
காஃபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் டிடி இன்னும் அதிக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அண்மையில் விஜய் டிவியில் ஆர்.ஆர்.ஆர் படம் தொடர்பான பேட்டி நிகழ்ச்சி நடத்தியது.
இப்பேட்டியில் ஆர்.ஆர்.ஆர் பட இயக்குநர் ராஜமௌலி மற்றும் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரிடம் பல்வேறு தகவல்கள் குறித்து டிடி உரையாடினார்.
இந்நிலையில், டிடி, வீல் சேரில் அழைத்து வரப்பட்ட ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் டிடி ஏன் வீல் சேரில் வருகிறார்? என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.
டிடிக்கு என்ன ஆச்சு? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், இதற்கு பதில் அளித்த டிடி, இதற்கு காரணம், டிடிக்கு திடீரென rheumatoid (முடக்குவாத பிரச்சனை) ஏற்பட்டுவிட்டதாக கூறி இருக்கிறார்.
மேலும், இந்த rheumatoid பிரச்சனையால், தன்னால் நடக்க முடியவில்லை என்றும், ஆனால் இதெல்லாம் தனக்குள் இருக்கும் குழந்தையை தடுக்க முடியாது என்றும் டிடி கூறி உள்ளார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சியானதுடன், டிடிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். மிக விரைவில் சரியாகிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.