பிரபல நடிகைகள் வீட்டுக்கு ‛சீல்’
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹிந்தி நடிகை கரீனாவின் வீட்டிற்கு மும்பை சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் நடிகைகள் கரீனா கபூர், கரீஷ்மா கபூர், அம்ரிதா அரோரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இயக்குனர் கரண் ஜோகர் வைத்த பார்ட்டியிலும் பங்கேற்றனர்.
இந்நிலையில், நடிகைகள் கரீனா, அம்ரிதா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கரீனா கலந்து கொண்ட பார்ட்டியில் பங்கேற்ற மேலும் சிலருக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், அந்த பார்ட்டியில் பங்கேற்றவர்களின் விபரங்களை மும்பை சுகாதாரத்துறையினர் சேகரித்து, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, மும்பையில் நடிகை கரீனாவின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் கரீனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.