பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி

cinema-corona
By Nandhini Dec 14, 2021 02:39 AM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையர் கரீனா கபூர், 41, அம்ரிதா அரோரா, 40, ஆகிய இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டது.

பாலிவுட் நடிகர் அனில் கபூர் மகள் ரியா கபூர் கடந்த வாரம் மும்பையில் நடத்திய விருந்தில் கரீனா மற்றும் அம்ரிதா ஆகியோர் பங்கேற்றனனர். இதில் அவர்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என தெரிகிறது.சரியான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கரீனா மற்றும் அம்ரிதாவுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களை ஆர்டிபிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறது.

முன்னதாக, கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், ஊர்மிளா மடோன்கர், மலைக்கா அரோரா, அக்‌ஷய் குமார், அமித் சாத், கோவிந்தா போன்ற பல பாலிவுட் பிரபலங்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.