‘குக் வித் கோமாளி சீசன் 3’-ல் புகழ் இருக்காரா? இல்லையா? இதோ வெளியான தகவல்

cinema pugazh cook with komali
By Nandhini Jan 04, 2022 06:48 AM GMT
Report

 ‘குக் வித் கோமாளி’ அடுத்த சீசனின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. ஆனால் புரோமோவின் மெயின் கோமாளி புகழ் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. ‘குக் வித் கோமாளி’ புகழ் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. சினிமா ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் புகழ் இம்முறை குக் வித் கோமாளியில் பங்குபெறமாட்டார் என்று தகவல்கள் பரவியது.

இது குறித்து, ரசிகர்கள், விஜய் டிவி பிரபலங்கள் இன்ஸ்டா பதிவுகளில் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்நிலையில் செஃப் தாமு தன் இன்ஸ்டாவில் புகழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான பதிலை தெரிவித்து, இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

குக் வித் கோமாளி புரோமோவை செஃப் தாமு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அப்போது, அவரின் பதிவிற்கு கீழ் பலர், ‘புகழ் ஏன் புரோமோவில் இல்லை?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘குக் வித் கோமாளியில் கண்டிப்பாக புகழ் இருப்பார்.

100% இது உண்மை’ என்று ரிப்ளை செய்தார். ‘எனக்கிது போதும் எனக்கிது போதும்’ என்று புகழின் ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். புகழின் இந்த அசுர வளர்ச்சியும், ரசிகர் பட்டாளமும் உண்மையில் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  

‘குக் வித் கோமாளி சீசன் 3’-ல் புகழ் இருக்காரா? இல்லையா? இதோ வெளியான தகவல் | Cinema Cook With Komali Pugazh

‘குக் வித் கோமாளி சீசன் 3’-ல் புகழ் இருக்காரா? இல்லையா? இதோ வெளியான தகவல் | Cinema Cook With Komali Pugazh