குக் வித் கோமாளி சீசன் 5 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? அப்போ இதை பாருங்க !

Cooku with Comali Tamil TV Shows
By Vidhya Senthil Sep 22, 2024 07:17 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

  குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை தட்டி போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  குக் வித் கோமாளி 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியில் என்றால் அது 'குக் வித் கோமாளி'தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

Cook with Komali Season 5

சமையல் போட்டியை மையமாக வைத்து கோமாளிகளின் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கலாட்டாக்களுடன் ஒவ்வொரு வாரமும் மக்களை மகிழ்வித்து வருகிறது. குக் வித் கோமாளி'யின் முதல் 4 சீசன்களை மீடியா மேன்சன் வழங்கி வந்த நிலையில், சமீபத்தில் விஜய் டிவி நிறுவனத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகியது.

இதனால் chef வெங்கடேஷ் பட் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அதன் பிறகு 5வது சீசனை Box Office Studio வழங்கியது. இதில் நடுவர்கள் முதல் கோமாளிகள் வரை சில மாற்றங்கள் ஏற்பட்டது.

மணிமேகலை - பிரியங்கா விவகாரம்; விதி மீறல் - வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

மணிமேகலை - பிரியங்கா விவகாரம்; விதி மீறல் - வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

அந்த வகையில் 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியில் வசந்த் வசி, ஸ்ரீகாந்த் தேவா, விடிவி கணேஷ், திவ்யா துரைசாமி, பிரியங்கா தேஷ்பாண்டே, இர்பான், ஷாலினி சோயா, அக்ஷய் கமல், சுஜிதா, பூஜா ஆகியோர் குக்குகளாக பங்கேற்றனர்.

மேலும் புகழ், குரேஷி, ஷப்னாம், சுனிதா, அன்ஷிதா, பரீனா, வினோத், ராமர், கென் ஆகியோர் கோமாளிகளாகவும் சீசன் 5ல் பங்கேற்றனர். தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் நடுவர்களாகவும், நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கினர்.

குக் வித் கோமாளி சீசன் 5 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? அப்போ இதை பாருங்க ! | Cinema Cook With Comali Season 5 Title Winner

டைட்டில் வின்னர்

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற, இறுதியாக பைனலிஸ்ட்டாக பிரியங்கா தேஷ்பாண்டே, இர்பான், சுஜிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஷூட்டிங்கின் போது 'குக் வித் கோமாளி'யில் இருந்து மணிமேகலை விலகிவிட்டதாக அறிவித்தார் .

அதற்கு காரணம் பிரியங்காதான் .தனது ஆங்கரிங் வேலையை தன்னை பார்க்க விடாமல் செய்ததாக மறைமுகமாக கூறிய மணிமேகலையின் வீடியோ வைரலாகி தற்போது வரை அந்த சலசலப்பு ஓயவில்லை.

priyanka

இதற்க்கு பிரியங்காவிற்கு ஆதரவாகவும் ,ஒருதரப்பு மணிமேகலைக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'குக் வித் கோமாளி' சீசன் 5ன் வெற்றியாளர் பிரியங்கா தேஷ்பாண்டே என்றும் 2வது ரன்னர் அப் இர்பான் என்று தகவல் வெளியாகியுள்ளன.