நடிகர் ரகுமான் மகள் திருமண வரவேற்பில் தமிழக முதலமைச்சர்

cinema- cm-stalin a-r-rahman daughter-marriage
By Nandhini Dec 10, 2021 04:48 AM GMT
Report

பிரபல நடிகர் ரகுமான் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடந்தது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதோடு பசுமை கூடை மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

ஏ.ஆர்.ரகுமான் அவரது மனைவி மற்றும், மணமக்கள் ருஷ்டா ரஹ்மான் - அல்தாப் நவாப் அவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகர் ரகுமான் மகள் திருமண வரவேற்பில் தமிழக முதலமைச்சர் | Cinema Cm Stalin A R Rahman Daughter Marriage