இன்று முதல் ‘பிக்பாஸ் 5’ ஆரம்பம் - பிரமாண்ட பிக்பாஸ் செட்டில் கமல்ஹாசன் - வீடியோ வைரல்

cinema-bigboss5-kamalhasan
By Nandhini Oct 03, 2021 05:57 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் இன்று முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்ப உள்ளது. கடந்த பிக்பாஸ் சீசன் 4 தொகுத்து வழங்கியது போல் பிக் பாஸ் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் பட்டியலும் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கின்றன. இதில் கலந்து கொள்ளும் 17 போட்டியாளர்கள் குறித்து விவரம் நாளை அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 5-ன் புத்தம்புதிய பிரமாண்ட செட்டில் கமல் இருக்கும் புதிய ப்ரோமோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.