‘என் பிரா சைஸை கடவுள் அளவிடுகிறார்’ - கொச்சையாக பேசிய பிக்பாஸ் புகழ் நடிகை - அதிரடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்

bigboss tittle winner swetha-tiwari speech probrem
By Nandhini Jan 28, 2022 09:02 AM GMT
Report

பாலிவுட் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஸ்வேதா திவாரி வெப் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில், நகைச்சுவைக்காக கூறிய கருத்து தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

சல்மான்கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர்தான் ஸ்வேதா திவாரி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்து பிக்பாஸ் டைட்டிலையும் ஜெயித்தார்.

இந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. படங்களில் மட்டுமல்லாது, வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார் ஸ்வேதா திவாரி. தற்போது, இவர் நடிப்பில் ‘ஷோ ஸ்டாப்பர்’ என்கிற வெப் தொடர் தயாராகி இருக்கிறது. இத்தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த வெப் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சி மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு நடிகை ஸ்வேதா திவாரி பேசுகையில், ‘என் பிரா சைஸை கடவுள் அளவிடுகிறார்’ என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

இவர் நகைச்சுவையாக கூறியதாக இருந்தாலும் அவரின் இந்த கருத்து பூதாகரமாக தற்போது வெடித்துள்ளது. நடிகையின் இப்பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

நடிகை ஸ்வேதா திவாரி பேசிய வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக விசாணை நடத்த போபால் காவல் ஆணையருக்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா உத்தரவிட்டிருக்கிறார்.

24 மணி நேரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். 

‘என் பிரா சைஸை கடவுள் அளவிடுகிறார்’ - கொச்சையாக பேசிய பிக்பாஸ் புகழ் நடிகை - அதிரடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் | Cinema Bigboss Tittle Winner Swetha Tiwari