இரவில் பயங்கர சண்டையில் வெடித்த பிக்பாஸ் வீடு - வீட்டைவிட்டுப் போகிறேன் கோபத்தில் ப்ரியங்கா

cinema-bigboss-priyanka
By Nandhini Dec 03, 2021 05:49 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது.

சீசன் தொடங்கியதிலிருந்து சிரித்து ஜாலியாக இருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவருக்குள் ஒருவர் கடும் சண்டையில் முட்டிக் கொண்டு வருகிறார்கள். தாமரை, வருண், அபிஷேக், சிபி, பிரியங்கா என சிலருக்குள் சண்டை பூதாகரமாக வெடித்து கொண்டே வருகிறது.

இன்றைய வெளியான ப்ரொமோவில் நிரூப், பிரியங்காவிடம் போடும் சண்டையில் அபிஷேக்கும் கோபத்தில் பேசுகிறார். ஒருகட்டத்தில் பிரியங்கா பிக்பாஸ் நீங்கள் இதை செய்யவில்லை என்றால் நான் வீட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று கோபமாக கூறுகிறார்.

இதோ அந்த ப்ரொமோ -