டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பம் - போட்டியாளர்கள் யார், என்ன ஸ்பெஷல்?
100 நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமையான நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 5ல் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகிய 5 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். யார் அந்த டைட்டில் வின்னர்? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் எபிசோடு நேற்று ஒளிபரப்பட்டது.
அதன்படி பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியில் நேற்று முடிவடைந்த நிலையில் ராஜு (Raju Jeyamohan) டைட்டில் பட்டமும், பிரியங்கா (Priyanka Deshpande) 2வது இடமும் பெற்றனர்.
அதேசமயம் 3வது இடத்தை பாவனியும் பிடித்தார், வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீர் 4வது இடத்தையும், சவாலான போட்டியாளராக பார்க்கப்பட்ட நிரூப் 5வது இடத்தை பிடித்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாக இருப்பதாகவும், இம்மாதம் இறுதி வாரத்தில் இந்நிகழ்ச்சி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும். இதற்கு பிக்பாஸ் அல்டிமேட் என்று பெரிடப்பட்டிருக்கிறது. இந்த பிரத்யேக ஓடிடி தளத்தை நேற்று சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பல்வேறு சீசன் போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும், இந்நிகழ்ச்சியை கமலஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார்.
13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், வனிதா, ஜூலி, அனிதா சம்பத் மற்றும் ஓவியா போன்றோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர அனைத்து பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.