அடிச்சது ஜாக்பாட்... - 12 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் இந்நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது.
ஃபைனல்ஸூக்கு இன்னும் 1 வாரம் மட்டுமே இருக்கிறது. இதில், டான்ஸ் மாஸ்டர் அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு நுழைந்துவிட்டார். சிபி, நிரூப், ராஜூ, தாமரை, பிரியங்கா, பாவனி ஆகிய 6 பேர் இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர்.
இதில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் முக்கியமான போட்டியாளர் ஒருவர், 12 லட்சம் பணத்துடன் கேம்மை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எல்லா பிக் பாஸ் சீசனிலும் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படும். பிக் பாஸ் குழு ஆஃபர் செய்யும் பணத்தை எடுத்து கொண்டு கேம்மை விட்டு வெளியேறலாம்.
பிக் பாஸ் முந்தைய சீசனில் கவின், கேப்ரில்லா ஆகியோர் ஸ்மார்ட் மூவாக பணத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5ல் கேஷ் பேக் ஆஃபரை சரத்குமார் அறிமுகப்படுத்தினார்.
3 லட்சம் பெட்டியுடன் சரத்குமார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். யோசித்து முடிவு எடுங்கள் என்று போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
3 லட்சம் என்பதால் போட்டியாளர்கள் யாரை அதை சீண்டவில்லை. ஆஃபர் கொஞ்சம் கொஞ்சமாக எகிறியது, 5 லட்சம் அடுத்தது 7 லட்சம், 9 லட்சம் வரை சென்றது.
நிரூப், தாமரையை மூளைச்சலவை செய்து கொண்டிருந்தார். அமீர், பிரியங்காவை அழைத்து, நான் எடுத்துக் கொண்டு செல்லவா? என ஐடியா கேட்டார். ஆனால் பிரியங்கா பெரிய தொகை வரும் வெயிட் பண்ணு என்றார்.
இந்நிலையில், பிக் பாஸ் குழு 12 லட்சம் வரை ஆஃப்ர் செய்ததாகவும் அதை எடுத்துக் கொண்டு போட்டியாளர் சிபி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.
தன்னம்பிக்கை அதிகமுள்ள சிபிலா 12 லட்சம் பணத்துடன் சென்று விட்டாரா? இல்லை இருக்காது! என அவரின் ரசிகர்கள் புலம்பி வருகிறார். இன்னும் சிலர் இதுவும் சிபியின் ஸ்மார்ட் மூவ் தான் என்கின்றனர்.