‛யார் யார் சிவம்... நீ நான் சிவம்...’ - பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமாரை ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்

cinema-bigboss
By Nandhini Jan 05, 2022 07:34 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் வெற்றியாளர் யார் என்று தெரிந்து விடும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமாக பார்க்கப்படுவது பணப்பரிசு வாய்ப்புதான். குறிப்பிட்ட தொகையை போட்டியாளர்களிடம் காண்பித்து, வேண்டுமானால், அந்த தொகையுடன் நீங்கள் வெளியேறலாம் என்பதே இந்த டாஸ்க். ஏலம் போல அந்தத் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதை தேர்வு செய்வதும், நிராகரிப்பதும், போட்டியாளர்களிடம்தான் உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள பரம்பரா வெப்சீரிஸ் பிரமோஷனுக்காக அதில் நடித்த நடிகர் சரத்குமாரை, களத்தில் இறக்கியது விஜய் டிவி நிர்வாகம். அது பிரச்சினை இல்லை. ஆனால், அதற்காக சரத்குமார் வந்த கெட்டப் தான் தற்போது நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

‘அன்பே சிவம்’ படத்தில் கமல் நடத்த கதாபாத்திரம் போன்ற உடை, நடை, அலங்காரம் என அனைத்தும் அப்படியே கமல் போன்றே இருந்தது.

போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கும் வந்தது கமல் தான் என்றே சில நொடிகள் தோன்றியிருக்கும். பரிசு பெட்டியை அவர் கையில் வைத்திருந்தார். அவ்வளவு தான், மொத்த பொருத்தமும், அப்படியோ பொருந்தி விட்டது.

பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்த நடிகர் சரத்குமார், வழக்கம் போல, போட்டியாளர்களிடம் கொஞ்சமாய் உரையாடி, வெப்சீரிஸிற்கு அதிகம் ப்ரொமோஷன் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

யார் பணம் எடுப்பார்கள் என்பதை விட்டுவிட்ட ட்ரோல் மன்னர்கள், இப்போதைக்கு சரத்குமாரை அட்மிட் பண்ணுவோம் என்று, ‘அன்பே சிவம்’ கெட்டப் பற்றி சிலாகித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.