பணப்பெட்டியில் ரூ.7 லட்சம் கொடுத்த பிக்பாஸ், பணத்தை எடுத்து தொட்டு பார்த்த போட்டியாளர் - யாருன்னு பாருங்க
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நாட்களில் இந்த சீசன் முடிவடைய உள்ளது.
போட்டியாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து, வீட்டைவிட்டு வெளியேற நினைப்பவர்கள் செல்லலாம் என்று பிக்பாஸ் கூற யாரும் அப்பணத்தை எடுக்க முன்வரவில்லை.
இன்றைக்கான ப்ரொமோவில், இப்போது போட்டியாளர்களுக்கு ரூ.7 லட்சம் வரை பிக்பாஸ் பணம் பெட்டியில் வைத்துள்ளார். இதை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று பிக்பாஸ் கூற, போட்டியாளர்கள் யாரும் பணத்தை எடுத்த மாதிரி தெரியவில்லை.
ஆனால், அமீர் மட்டும் பணத்தை கையில் எடுத்து பார்க்கிறார். இந்த ப்ரொமோவை பார்த்த பார்வையாளர்கள் அமீர் இந்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்றிருப்பாரோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.