பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமார் - மாஸான ப்ரொமோ

cinema-bigboss
By Nandhini Jan 04, 2022 07:51 AM GMT
Report

தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைய உள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி தருணத்தில் ஏதேனும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் கொடுக்கும் பணத்தினை எடுத்துக்கொண்டு வெளியேற வாய்ப்புகள் ஒவ்வொரு சீசனிலும் கொடுக்கப்படும்.

கடந்த 2 சீசனிலும் கவின் மற்றும் கேபி இருவரும் பணத்தினை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டுச் சென்றனர். அதேபோல், இந்த சீசனில் இந்த வாய்ப்பு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் ப்ரொமோவில் பிரபல நடிகர் சரத்குமார், ஜொலி ஜொலிக்கும் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். 

இதோ அந்த ப்ரொமோ -