பிக்பாஸ் அபினய்யை விவாகரத்து செய்ய போகிறாரா மனைவி? நடந்தது என்ன?
தற்போது பிக்பாஸ் சீசன் 5 மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நாட்களில் இந்த நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் அபினய் வட்டி. இவர் மறைந்த பழம்பெரும் நட்சத்திர தம்பதி ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரனாவார்.
பிக்பாஸின் தற்போதைய சீசனில் அதிகம் பேசப்பட்டது பாவனி, அபினய் காதல் விவகாரம் தான். அபினய், பாவனி மீது அதீத அக்கறை, அன்பு காட்டியது பற்றி வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்கள் கிசுகிசு பேசி வந்தனர். இந்த காதல் சர்ச்சையே அபினய் வீட்டிலிருந்து வெளியேற முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அபினய், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். வெளியே வந்த பிறகும் அவர் இது குறித்து, இது ஒரு கேம். இதை தாண்டி வாழ்க்கை உள்ளது என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் அபினய்.
பாவனி விவகாரத்தை உங்கள் மனைவி எப்படி எடுத்துக் கொண்டார் என்ற கேள்விக்கு பேட்டி ஒன்றில் பதிலளித்த அபினய், எல்லா மனைவிகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ அப்படி தான் என்று கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி விவகாரம் பெரிதாக வெடித்த போது, இது குறித்து அபினய் மனைவி, நீ எப்படிபட்டவன் என எனக்கு தெரியும். என்னை விட உன்னை யாருக்கும் தெரியாது. என்னை போல் புரிந்து கொள்ளவும் முடியாது. Love you always. always team abhinay - aparna abhinay என இன்ஸ்டாகிராமில் அபினய்யின் மனைவி அபர்னாவும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுவரை இன்ஸ்டாகிராமில் தனது பெயரை அபர்னா அபினய் என குறிப்பிட்டிருந்த அபர்னா, தற்போது அபர்னா வரதராஜன் என்று மாற்றி இருக்கிறார். நடிகை சமந்தாவும், இப்படி தான் தனது கணவரை பிரிய போவதாக முதலில் சொன்னார். அதே வழியை பின்பற்றுகிறாரா அபர்னா, அபினய்யை விவாகரத்து செய்ய போகிறாரா, முதலில் அபினய்க்கு ஆதரவாக பேசிய அபர்னா இப்போது ஏன் தனது பெயரில் இருந்த கணவர் பெயரை நீக்கினார் என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும், வதந்திகளும் பரவி வருகிறது.