பிக் பாஸ் வீட்டில் பயங்கர அடிதடி சண்டை - வெளியேற்றப்படும் முக்கிய போட்டியாளர் - ரசிகர்கள் அதிர்ச்சி

cinema-bigboss
By Nandhini Jan 03, 2022 11:21 AM GMT
Report

 பிக் பாஸ் ஷோ என்றாலே எப்போதும் காதல், மோதல், அடிதடி சண்டை என எல்லாமே இருக்கும். அதிலும் சில நேரங்களில் சண்டை கைகலப்பு/அடிதடி வரை கூட செல்வதுண்டு.

தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் நடைபெற்று இருக்கிறது. தமிழில் இல்லை ஹிந்தி பிக் பாஸில். தற்போது ஹிந்தியில் நடந்து வரும் பிக் பாஸ் 15 இன்னும் சில வாரங்களில் நிறைவு பெற இருக்கிறது. இந்த நேரத்தில் போட்டியாளர்களுக்கு சில கடினமான டாஸ்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ராஷாமி தேசாய் மற்றும் தேவலீனா பட்டசார்ஜீ ஆகியோர் இடையே போட்டி நடந்து கொண்டிருக்க அவர்களுக்கு ஆதரவாக உமர் ரியாஸ் மற்றும் பிரதிக் ஆகியோர் செயல்படுகின்றனர். அவர்கள் ஒருகட்டத்தில் அடிதடி சண்டையில் இறங்குகின்றனர்.

அது ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது. அதன் பின் பிக் பாஸ் குறுக்கிட்டு இந்த வன்முறையில் ஈடுபட்ட உமர் ரியாஸை பற்றி பேசுகிறார். அங்கு இருக்கும் அனைவரும் ஷாக் ஆகி இருப்பதை பார்த்தால் உமர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார் என தெரிகிறது.