பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர் இவர்தான் - வெளிவந்த உறுதியான தகவல்
குறைந்த வாக்குகள் பெற்றதால் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய நபர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி 90 நாட்களை எட்டிய நிலையில் தற்போது, 8 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகிறார்கள்.
இதில் யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த டாஸ்க்கில் அமீர் மட்டும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக சென்றிருக்கிறார்.
மீதமுள்ள 7 போட்டியாளர்களும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். அனைவரும் நாமினேஷிலிருந்த நிலையில் வழக்கம்போல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அமீர், சஞ்சீவ், சிபி ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தனர்.
இதில் அமீர், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் தப்பித்துக் கொண்டார். இந்நிலையில் மீதமுள்ள இருவரில் சஞ்சீவ், மிக குறைந்த வாக்குகள் பெற்றதால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்.