பிக்பாஸ் 5 டிக்கெட் ஃபினாலேவை வென்றவர் இவரா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இறுதி போட்டிக்கு செல்வதற்கான டிக்கெட் டு ஃபினாலேவை வெல்லும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரையில் நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை விட படு மோசமான டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் இது என ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களும் கழுவி ஊற்றி வருகின்றனர்.
ஏனென்றால், காலில் அடிபட்டுள்ள அமீர் ஜெயிக்க வேண்டும் என பிக் பாஸ் டீமே இந்த டாஸ்க்கை இவ்வளவு மொக்கையாக நடத்தி உள்ளது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமீர் மற்றும் சிபிக்கு இடையே நடந்த கடும் போட்டியில், அமீர் தான் டிக்கெட் டு ஃபினாலேவை வென்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிபிக்கு கிடைக்க வேண்டிய டிக்கெட் டு ஃபினாலே செண்டிமெண்டை போட்டு அமீருக்கு கிடைத்திருக்கிறது என ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.