பிக்பாஸ் கொடுத்த டிக்கெட் பினாலே டாஸ்க் - பிரியங்காவை வைச்சு செய்யும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. 80 நாட்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விரைவில் நிறைவடைய உள்ளது.
தற்போது இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவை வெல்வதற்கான போட்டி நடந்து வருகிறது.
இந்த டாஸ்க்கில் நேற்று பிரியங்காவும், தாமரையும் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில், ஒன்னும் இல்லாத விஷயத்தை பலூன் போல ஊதி பெரிதாக்குவது யார் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு, பிரியங்கா முகம் வைக்கப்பட்ட போர்டின் மீது போட்டியாளர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் இந்த டாஸ்கிலும் பிரச்சினை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.