அம்மா... என கத்திய மகன்.. ஓடி வந்து கட்டி அணைத்து முத்தமிட்ட தாமரை - கண்கலங்கும் அழகிய ப்ரொமோ

cinema-bigboss
By Nandhini Dec 24, 2021 05:20 AM GMT
Report

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்புடன் 80 நாட்களையும் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சி இன்னும் சிறு நாட்களில் நிறைவடைய உள்ளது. 

இன்றைய வாரம் முதல் நாளிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை புரிந்து வருகிறார்கள். 

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில் தாமரையின் மகன் கேட் திறந்தவுடன் அம்மா... என்று கத்தியதும்... தாமரை மகிழ்ச்சியில் ஓடி வந்து மகனை அள்ளி, அரவணைத்து முத்தமிட்ட அழகிய ப்ரொமோ வெளியாளியுள்ளது. இந்த ப்ரொமோவை பார்த்த போட்டியாளர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களின் கண்களிலும் கண்ணீர் வரவழைக்கிறது. 

இதோ அந்த ப்ரொமோ -