ஆராரி... ஆரிரரோ... பாடல் இசைக்க... பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ப்ரியங்கா அம்மா - மகிழ்ச்சி பொங்கும் ப்ரொமோ

cinema-bigboss
By Nandhini Dec 23, 2021 08:26 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. 80 நாட்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கும் இந்த சீசன் மிக விரைவில் நிறைவடைய உள்ளது. 

இந்நிலையில், இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். 

இன்றைக்கான ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரொமோவில், பிரியங்காவின் குடும்பத்தினர் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர்.

அம்மாவை பார்த்ததும் பிரியங்கா கதறி அழுது ஓடிச்சென்று கட்டிப்பிடித்து இருக்கிறார். மேலும் பிரியங்காவின் சகோதரரும் உடன் வந்திருக்கிறார்.

பிரியங்காவின் அம்மாவிடம் பலரும் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கின்றனர். "I am Happy for you" என பிரியங்காவின் அம்மா கூறி இருப்பதும் ப்ரொமோவில் வந்திருக்கிறது.