காதலியை பார்த்ததும் ஆனந்தத்தில் துள்ளு குதித்து ஓடி வந்த நிரூப் - அழகிய ப்ரொமோ
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வழக்கம் போல ரசிகர்களின் பேராதரவோடு விறுவிறுப்பாக, இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு ப்ரொமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நடிகை யாஷிகா திடீரென்று பிக்பாஸ் வீட்டிற்கு வருகை புரிந்தார்.
தனது காதலனான நிரூப்பிடம் அவர் பேசும் அழகிய ப்ரொமோ வெளியாகி இருக்கிறது.
இந்த ப்ரொமோவில், நடிகை யாஷிகா, தனது காதலனுடன் ஒரு கண்ணாடி வழியாக நின்றுகொண்டு பேசுகிறார். பின்பு, போட்டியாளர்களிடம் அவர் பேசுகிறார். உடல்நிலை சரியாகி மீண்டு வந்துள்ளதால் பலரும் யாஷிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.