‘இப்போ நான் என்ன செய்யணும்… சும்மா இரு…‘ - ராஜூ செய்த செயல் கோபமடைந்த அக்ஷரா
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தினமும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.
இன்றைக்கான முதல் ப்ரொமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில் தாய கட்டையில் ஹவுஸ்மேட்ஸின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. 3 பஸ்ஸர் அடித்த பின்பு அதில் யாருடைய முகம் மேலே உள்ளதோ, அவர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார் என பிக் பாஸ் கூறியுள்ளார்.
உடனே ராஜூ, முகம் தெரிந்தால் தானே என்று தாயக் கட்டை மீது ஏறி அமர்ந்து கொள்கிறார். இதனால், அக்ஷராவுக்கு கோபம் வருகிறது.
இப்படி உட்கார்ந்திருந்தால், நான் எப்படி விளையாட? என்று அக்ஷரா கேட்க, அதற்கு ராஜூ ‘நீ விளையாட வேண்டாம் சும்மா இரு” என நக்கலாக சொல்ல, உடனே அக்ஷரா கோபித்து கொள்கிறார்.
இதோ அந்த ப்ரொமோ -