நிரூப்பை சீண்டிய ப்ரியங்கா - ஆவேசத்துடன் பேசும் சிபி - பற்றி எரியப் போகும் பிக்பாஸ் வீடு

cinema-bigboss
By Nandhini Dec 08, 2021 05:23 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் தமிழ் 5 நிகழ்ச்சி பிரபல விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீசன் மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் அபிஷேக் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இந்த வாரத்திற்கான டாஸ்க்கை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார். இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அந்த ப்ரொமோவில், நிரூப் ப்ரியங்காவை பார்த்து, அவளுக்கு பாட்டை தவிர ஒன்னும் தெரியாது என்று சொல்ல, அதற்கு பிரியங்கா, முதுகுல குத்துறத தவிர வேற என்ன தெரியும் என நம்மகூட கேக்கலாம் என்று பேசிவிட்டு, சாப்பிடும் போது எல்லோருக்கும் இருக்குதா என்று பார்த்துவிட்டு சாப்பிடுங்க என்று பேசிக்கொண்டிருக்கிறார் ப்ரியாங்கா.

இதனால், சிபி கோபமடைந்து சாப்பிடும் போது இப்படியெல்லாம் பேசக்கூடாது. எதிரியாக இருந்தாக்கூட இந்த மாதிரி வார்த்தையை விடக்கூடாது என்று ஆவேசத்துடன் பேசுகிறார். மக்களின் ஆதரவை பெற்ற ப்ரியங்கா சில நாட்களாகவே தன் பேச்சுக்களால் பெரும் விவாதமே நடத்தி வருகிறார். இதோ இன்றைக்கான ப்ரொமோ -