‘அகம் டிவி வழியாக அகத்தின் உள்ளே..’ வீடியோ கான்பரன்சியில் ஒலிக்கும் கமல்ஹாசனின் குரல்?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெளிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பிறகு நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கமல்ஹாசன் விரைந்து நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற பேச்சு எழ ஆம்பித்துள்ளது.

இதனையடுத்து, இவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நடிகர் விஜய்சேதுபதி, நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் சூர்யா என்று செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், என் தந்தை ஆரோக்கியத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவித்த, பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என்றும், என் தந்தை நலமுடன் இருக்கிறார். விரைவில் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார் என்று சுருதிஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சுருதிஹாசன் தான் வரும் வாரத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள என்ற செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘அகம் டிவி வழியாக அகத்தின் உள்ளே..’ என்ற கமலஹாசனின் குரல் ஒலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்