பிக்பாஸில் பொருட்களை அடித்து நொறுக்கிய அக்ஷரா - பரபரப்பான ப்ரொமோ

cinema-bigboss
By Nandhini Nov 24, 2021 05:14 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 பிரபல தொலைக்காட்சி விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கனா காணும் காலங்கள் என்ற டாஸ்கில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் மாணவ, மாணவிகளாக மாறி இருக்கிறார்கள். இந்த டாஸ்கில் சிபி மற்றும் ராஜு ஆசிரியராக உள்ளனர்.

இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில், சிபி மற்றும் அக்ஷரா இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இதில், அக்ஷரா கோபத்தில் பிக்பாஸ் வீட்டு பொருட்களை அடித்து நொறுக்கியிருக்கிறார். இந்த ப்ரொமோவால் பார்வையாளரின் எதிர்பார்ப்பினை அதிகரித்திருக்கிறது.